சாலையோர கடைகள்

சாலையோர கடைகள்

" கோபால், எங்க போற"
" கடைக்கு தான் வேலு"
" என்ன வாங்க போற"
"காய் கறி"
" நம்ம தெருவுலேயே இரண்டு காய்கறி கடை இருக்கும் போது, ஏன் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் மார்கட்டுக்கு போற"
" இரண்டு இல்ல, இப்ப மூனு காய்கறி கடை இருக்கு, ஒத்துக்கிறேன், ஆனா , இவங்க காசை கொள்ளை அடிக்கறாங்கப்பா"
" நான், தினமும் இவங்க கிட்ட தான் வாங்கிறேன், எனக்கு அப்படி தோனலையே கோபால்"
" வேலு, எல்லா ஐடத்திலுயும் ஐந்து ரூபாய் ஜாஸ்தி வைத்து விக்கிறாங்க"
" இருக்கட்டுமே, அதனால என்ன"
" ஐந்து ரூபாய் உனக்கு பெரிசா தெரியலையா"
" கோபால், கொஞ்சம் பழகிட்டா, வீட்டு வாசல் தேடி வந்து காய்கறி கொடுக்கறாங்க. மழை, வெய்யில் எதுவுமே அவங்க பாக்கறது கிடையாது. அவங்களுக்கு தெரிந்தது எல்லாம் உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான்."
" நம்ம மட்டும் திருடியா சம்பாதிக்கிறோம்"
" நீ ஏசி கிழே ஹாயா வேலை செய்யர ஆளு, அவங்க வாழ்க்கை அப்படியா சொல்லு"
" அப்ப, அவங்க செய்ரது செரின்னு சொல்றியா"
" நூறு சதவீதம் சரி, இப்ப நான் ஒன்னு உங்கிட்ட கேக்குறேன், நகை கடைக்கு போற, அங்க நகை வாங்குற, அந்த கடைகாரன், செய் கூலி, சேதாரம், அந்த வரி, இந்த வரி எல்லாம் வசூலிக்கும் போது நீ அவன் கேட்கும் பணத்தை கொடுக்காம நகையை உன்னால் வாங்கிட முடியுமா, சொல்லு கோபால்"
" முடியாது "
" காரணம்"
" தெரியலையே"
" நகை மேல இருக்கிற மோகம், அந்த கடையின் படாடுபமான சூழ்நிலை"
"........."
" என்ன பதில் இல்லை "
" நீ சொல்ரது நியாயம் தான்"
" அப்ப எங்க காய்கறி வாங்க போற "
"நீ, இவ்வளவு சொன்ன பிறகு, மார்கட்டுக்கா போவேன், நம்ம தெரு கடைக்கு தான்"
" இரு, நானும் என் கூட வரேன்"

- பாலு. 
   
  

எழுதியவர் : பாலு (31-May-20, 9:38 am)
சேர்த்தது : balu
Tanglish : saalaiyora kadaigal
பார்வை : 120

மேலே