மீட்பு

புரண்டு கூட படுக்காமல்
வயிற்றில் உருவான கருவை
கருத்தாய் சுமந்தவள்...

பெற்ற சிசுவை
ஈ எறும்பு அண்டாமல்
பாதுகாப்பாய் வளர்த்தவள்...

தனக்கு உணவில்லை என்றாலும்
பிள்ளையின் வயிறு நிரம்ப
உணவூட்டி மகிழ்ந்தவள்...

எழுத்தறிவு இல்லை என்றாலும்
பள்ளி அனுப்பி படிக்க வைத்து
அழகு பார்த்தவள்...

தன் இல்லத்து இளவரசியை
நன்றாய் வளர்த்து
நல்ல வாழ்வு வாழ வைக்க
ஆசை கொண்டவள்...

பள்ளி சென்ற பிள்ளை
திரும்பி வராமல் பேதலித்து நிற்கின்றாள்...

தெரு தெருவாய்
தேடித் தேடி அலைகின்றாள்...

எங்கு தேடியும் காணாமல்
புழுதியை தலையில் போட்டு
அழுது புரல்கின்றாள்...

இறுதியாய் மகள் கடத்தப்பட்ட
தகவல் மட்டும் கிடைக்க!

மகள் என்ன ஆனாளோ
எப்படி இருக்கிறாளோ
சாப்பிட்டாலோ இல்லையோ
உயிரோடு இருக்கிறாளோ இல்லையோ
அவளுக்கு என்ன நேர்ந்ததோ
எண்ணி எண்ணி
தன்னுள் வெதும்பி
தன் நிலை மறக்கிறாள்...

பிள்ளைக்கு மீட்க்கப்பட
வாய்ப்பு கிடைக்குமோ?
தாய் சித்தம் தெளிந்து
பிள்ளையை அணைப்பாளோ?

விடை தெரியா கேள்விகள்...

கடத்தப்படும் பெண் பிள்ளைகள்,
பெண்களுக்கு
இழைக்கப்படும் கொடுமை
ஒன்று தான்
அது உலகே அறியும்...

அந்த கொடுமை இழைக்கப்படும் முன்
அவர்களை காப்பாற்றி
தாயிடம் ஒப்படைக்கப்
போராடும்
அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி...😢😢😢

எழுதியவர் : கீர்த்தி (31-May-20, 12:31 pm)
சேர்த்தது : கீர்த்தி
பார்வை : 163

மேலே