இயற்கையில் ஒரு காட்சி

சோலையில் வசந்த கால
தென்றல் வீச
நீலக் குயில் பாடத் தொடங்க
கார்மேக விண்ணைக்கண்டு
தோகை விரித்து வந்தது
ஓர் மயில்
ஆடி ஆடி மகிழ
தன் பாட்டிற்குதான் ஆடுதோ மயில்
என்று நினைத்த குயில் மயிலிடம்
கேட்டது, ' எப்படி என் பாட்டு
இப்படி உன்னை ஆட வைக்குதே மயிலே'
என்று....... குயிலே நான் உன் பாட்டிற்கு
எங்கு ஆடுகிறேன்.... என்னை ஆட வைப்பது
உன் பாட்டல்ல .... அந்த மழை மேகமே என்றது மயில்
இதைக்கேட்டு ஆடிப்போனது குயில்

அங்கு சோலையின் நடுவே
பூத்து குலுங்கிய மல்லிக்கொடி
அதன் வாசம் இழுக்க அருகில்
சென்றேன் நான்...
ரீங்காரம் இசைத்து கரு வண்டு
ஒன்று மல்லிகையின் மதுவை
மொய்த்து பருக..... மல்லிப்பூ
கருவண்டைக் கேட்டது...' வண்டே
என் மதுவிற்கு மயங்கித்தானே
இந்த உன் ரீங்காரம் ' ....அதற்கு
வண்டு சொன்னது..;' இல்லை மல்லிப்பூவே
இந்த ரீங்காரம் என் பேட்டைக்கு நான்
விடும் அழைப்பு..... வந்து என்னுடன்
மது உண்டு.... மயங்கி என் மீது
மையல் கொள்ள...'

என்ன மையிலோ என்ன வண்டோ

மனிதன்தான் மமத்தைக்கொண்டவன்
என்று நினைக்க .....இயற்கை அங்கு
காட்டியது.... சில பறவையும் வேண்டும் கூட
என்று........

பார்க்க பார்க்க ஏதேதோ சொல்லும்
இயற்கை !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-May-20, 12:33 pm)
பார்வை : 182

மேலே