இயற்கை தண்டித்தது

கொட்டும் பேய் மலை
ஊருக்கு வெளியே
பாழடைந்த வீடு-அவன்
கடத்தி வந்த பெண்ணின்
அழுகையின் அவல ஒலி
வெளியில் கேட்கவில்லை
மானின் மீது பாயும்
புலிபோல் காமுகன்
அவள் மீது
ஒரு கொடிமின்னல்
அவன் கண்ணைப் பறிக்க
அவன் தலையில் வீழ்ந்தது
பேரிடி ..... கரிக்கட்டையாய் அவன்
அவன் கீழ் அவள் மானம் காக்கப்பட்டு

இது அவள் சொல்லி பின்னால்
நான் கேட்ட செய்தி ;
செய்தி ரிப்போர்ட்டர் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-May-20, 5:57 pm)
பார்வை : 103

மேலே