காதல்

கடற்கரையில் நான்......
இந்த கடல் அலைக்கும்
மணற் கடற்கரைக்கும்
என்னதான் அப்படியோர் காதலோ
ஓயாமல் வந்து கரைக்கு
முத்தம் அள்ளி தரும் அலை

என் மனதில் இப்போது அவள்...
என்னை கடற்கரை மணலில்
காக்க வைத்த என் காதலி
இன்னும் ஏன் வாராது இருக்கின்றாள்
வருவாளா என்ற ஏக்கம் தந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jun-20, 7:57 am)
Tanglish : kaadhal
பார்வை : 78

மேலே