305 பொறாமையால் பயன் வாராது, பொருந்தும் பெரும் பாவம் – பொறாமை 3

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

வவ்விடலே முதலாய வினையாலொவ் வோர்பயன்கை
..வந்து கூடும்
அவ்வினைக ளியற்றவெவ்வே றிடங்கருவி சமையமும்வந்
..தமைய வேண்டும்
எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல் எரியென்ன
..இதயந் தன்னைக்
கவ்வியுண்ணு மவ்வியத்தாற் கடுகளவு பயனுளதோ
..கருதுங் காலே. 3

– பொறாமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பிறர் பொருளைக் கவர்தல் முதலிய தீமையான செய்கைகளால் ஒவ்வொரு பயன் உன் கை வந்து சேரும். அத்தகைய செயல்கள் செய்ய வெவ்வேறு இடம், கருவி, காலம் எல்லாம் பொருந்தி அமைய வேண்டும்.

எந்த இடத்திலும், எப்பொழுதும் நம்மை விட்டு அகலாமல் தீப்போல் உள்ளத்தைத் கவர்ந்து உண்ணும் பொறாமையால் கடுகளவாவது பயன் உள்ளதா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-20, 9:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே