நகைச்சுவை துணுக்குகள்

அப்பா: டேய் நீ உன்னோடே ஃபோர்ஃபாதர்ஸைப் பத்தி நீ முதல்லே தெரிஞ்சிக்கணும்.

மகன்: நீங்க ஒரு ஃபாதர் மட்டும்தான் எனக்குத் தெரியும். மிச்சம் மூணு ஃபாதர்ஸைப் பத்தி அம்மா இதுவரையிலும் எதுவுமே எங்கிட்டே சொல்லவே இல்லையே அப்பா.

அம்மா: இதுக்குத்தான் உங்க கிட்டே சொல்றது, தத்துப்பித்துன்னு எதையாவது அவன்கிட்டே உளறி வெக்காதீங்கன்னு. ஃபோர்ஃபாதர்ஸ் என்ன ஃபோர்ஃபாதர்ஸ்? நம்ம முன்னோர்களைப் பத்தின்னு அவன்கிட்டே சொல்லி இருக்கலாமில்லே.
********************
அந்த வீட்டுப் பெரியவர் உடம்பு சரியில்லாம படுத்திருந்தாரே. என்ன ஆனார்?

அந்த வீட்டுலே எல்லாரும் ஆசைப்பட்ட படியே ஆயிடுச்சு.

ஓ? பிழைச்சுட்டாரா?

இல்லை. செத்துட்டார்.
********************
இவர் ஓடற ரயிலிலிருந்து விழுந்து தப்பிச்சவருங்க.

ஓடற ரயிலிலிருந்து விழுந்தும் தப்பிச்சவரா? இல்லே ஓடற ரயிலே இருந்து விழுந்ததனாலே தப்பிச்சவரா?
********************

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (2-Jun-20, 9:50 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 35

மேலே