யாகம்

விடுகதைபோல் இருக்கிறதே
விடையில்லா நோயும் – வெகு
விரைவாகப் பாயும் – இதை
விரட்டிவிட நீயும் – பொது
விதிமுறையைக் கடைப்பிடித்து
விட்டாலே மாயும்
**
கொடுநோயின் படுகுழிக்குள்
குந்தவிடும் தேகம் – உயிர்
கொல்லியதன் தாகம் – அதைக்
கொன்றுவிட வேகம் – மனம்
கொண்டுனையே நீகாத்துக்
கொள்வதுவே யாகம்.
**

எழுதியவர் : **மெய்யன் நடராஜ் (2-Jun-20, 4:49 pm)
பார்வை : 44

மேலே