உனக்காக ஒரு மடல்

உலகின் தலை சிறந்த பூ
உன் தலையில்
இருந்த பூ

ரம்பை மேனகை ஊர்வசி
இணைந்து ஆரம்பித்த
அழகிகள் முன்னேற்றக் கழகத்தில்
தேவதைக்கு அமைப்பாளர்
உனக்கு அழகாளர்
பதவி கொடுக்கப்பட்டது

முயல் ஆமை கதையில்
முயல் தோற்றது
இயலாமையால் அல்ல
உன் கயலைக் கண்டு
வியந்து நின்ற
முயலாமையால்.

உன்னைக் காணும் போதெல்லாம்
கனவு காணுங்கள்
என்ற மந்திரச்சொல்
மனதிற்குள் ஒலிக்கிறது

தாஜ்மகாலை கட்டியவன்
தலைவிரல் வெட்டப்பட்ட தாம்
தன் தலையையே வெட்டினாலும்
உன்னைக் கட்ட தயார்

நிலவு எதற்கு அதிகாலை
மறைகிறது
உன் தாமரை முகம்
வெளியே வருவதால்

நீ
உலக அழகிப்போட்டியில்
கலந்துகொள்ள
இங்கிலாந்து சென்றாள்
அந்த நேரம்
இந்தியாவில்
மயில் தேசியப்பறவையானது..

காந்தி ஜெயந்தி அன்றும்
மூடாத ஒரே கடை
உன் கடைக் கண்

தெரசா விற்கும்
உனக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா
காயம் பட்ட இதயங்களை
குணமாக்கினார்
நீயோ என் இதயத்தை
காயம் செய்தவள்

எழுதியவர் : குமார் (3-Jun-20, 6:38 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : unakaaga oru madal
பார்வை : 123

மேலே