மன்னிப்பு

வயது அனுபவத்தில்
மரணம் இயற்கைதான்
அறிந்திருந்தாலும்

உணவு நாடி
ஊருக்குள் வந்த
உன்னை

எங்கள் இனம்
உனக்கு உண்ண
கொடுத்த அன்னாசி
பழம்

உன் உயிரை
கொண்டு போக
காரணமாகி விட்டதே

மரணம் துக்கம் தான்
அதை துடி துடிக்க
வைத்து அனுப்பியது
அதைவிட கொடுமையல்லவா

எத்தனை துன்பபட்டாயோ

மன்னிப்பு கேட்கிறோம்
உன்னை இழந்துவிட்டு

இயற்கை எங்களுக்கு
எத்தனை நன்மைகள்
அளித்தாலும்

எங்களால் இத்தகைய
இழி குணத்திலிருந்து
மாறவே முடியவில்லை

மன்னித்து விடு

எழுதியவர் : தாமோதரன். (5-Jun-20, 7:58 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : mannippu
பார்வை : 69

மேலே