நகைச்சுவை

மூன்று பேர் நகைச்சுவை
ஒரு மரத்தின் கீழ் வெள்ளை வேஷ்டி கட்டிய மூவர் உட்காந்திருந்தனர்,
அவ்வழியே சென்ற மனிதரில் சிலர் உண்மையில் இடம் புதிதாய் இருந்த படியால்
இந்த மூவரிடம் வந்து பெரியவர்களை பார்த்து ஐயா இஞ்சி எங்கு வாங்கலாம் என்று கேட்டனர்,
அதற்கு அந்த பெரியவர்களில் ஒருவர் ஓ அதுவா இங்க விக்குது என்றார் சிரித்துக்கொண்டே , உடனே அவர் தங்கப் பற்கள் கட்டி இருந்தது தெரிந்தது ,
அடுத்தவர் ஓ அதுவா அங்கே விக்குது, இங்க விக்குது என்றார் தன் கை விரல்களை நீட்டி ,அந்த மனிதர் பெரிய தங்க மோதிரம் அணிந்திருந்தார்,
அதில் இருந்த இன்னொரு பெரியவர் ஓ அதுவா அங்க விக்குது இங்க விக்குது என்று தலையை ஆட்டி ஆட்டி சொன்னார் உடனே அவர் போட்டிருந்த கடுக்கண்கள் காதுகளில் ஆடின ,
ஓ இதுதான் விஷயம் என்று தெரிந்து வந்து நின்ற மனிதர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே திரும்பினார், அவர்கள் வீடு திரும்பும் வழியில் இந்த பெரயவர்களை பார்த்து கே ட்டு அறிந்த நகைச்சுவைகளை நினைத்து நினைத்து அடக்க முடியா சிரிப்புடன் சென்றனர் .

எழுதியவர் : பாத்திமாமலர் (5-Jun-20, 11:16 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : nakaichchuvai
பார்வை : 93

மேலே