என் செல்ல கிறுக்கி 💕💕

இரு உடம்பு இங்க ஒரு உயிர் ஆச்சு...
உன்னோட மனசுக்குள்ள நா காதல வெதச்சாச்சு...

நீ கண்ண கட்டி விட்டு போன பாதையில....
தடுமாறி தவிக்கிறேன்டி உன்ன தேடி...

படிக்க முடியாத ஒரு வரி கவிதையா நீ...
உணரமுடியாத புது சுகம் தான் நீ...
தேக திமிர் அழகி
திணறடிக்கும் பேச்சு அழகி....

தென்னங்கள்ளு பார்வையால பாவிப்பய மனச கரைக்கிறியே...
சின்னஞ்சிறு மனச ரெக்ககட்டி பறக்க வைக்கிறியே....

ஆயிரம் பூ வாசம் அது என்ன மயங்க வைக்கலடி...
உன்னோட வாசம் அது என்ன திக்குத் தெரியாம ஆக்குதடி...

ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு ஒத்த ரோசா பூ பூத்திருக்கு அதை நீயும் பறிக்க வாடி...
உனக்காக நான் காத்திருப்பேன் கால் வலிக்க...

நெத்தி முடி உன் உதட்ட ஒரசயில என் நெஞ்சு துடிதுடித்துப் போகுதடி...
அத நெனச்சு நெனச்சு தவிக்குதடி....

உன்னோட ஒசராம் அது என் நெஞ்சோடு நிக்கிது..
உன் கண்ணு ரெண்டும் காந்தம் போல என்னை இழுக்குது....
உன் பின்னால நான் வாரேன் என்னை ஏறெடுத்துப் பாருடி கொஞ்சம்...

எழுதியவர் : Raja Lingam (5-Jun-20, 12:03 pm)
சேர்த்தது : Raaja Lingam
பார்வை : 362

மேலே