தமிழ் மொழியல்லஉயிர்

இந்தப் பிறவி மட்டுமல்ல
இனி எடுக்கின்ற...
எல்லா பிறவிகளிலும்...
தமிழனாக பிறக்கவே விரும்புவேன்.

"தமிழ்"
சொல்லிப் பாருங்கள்...
நாவில் இனிக்கும்.
தமிழ் வெறும் மொழியல்ல...
எங்கள் உணர்வு..!!

எத்தனை கோடி மொழிகள்
கலந்தாலும்...
எத்தனை கோடி யுகங்கள்
கடந்தாலும்...
காலத்தால் அழியாது தமிழ்...
ஏனென்றால்..

வெறும் மொழியல்ல...
எங்களின் உயிர் மூச்சு...
தமிழ்.!!

பாரில்... மொழிகள்,
பலவுண்டு..
எந்த மொழிக்கும்...
இல்லாத சிறப்பு... இதற்குண்டு..!

மெல்லினம், வல்லினம்,
இடையினம்...
இருக்கிறதா...
இங்கு...
வேறெந்த மொழிகளிலும்.

முதல் மொழி இது...
மூத்த மொழி இது...
அண்டை மாநில மக்களும் கூட...
அறிய விரும்பும்...
மொழி இது.

தமிழின் அருமை...
உலகுக்கே தெரியும்...
நம்மில் சிலரை தவிர.!

வேற்று மொழிகள்
நூறு கற்றாலும்...
தமிழை நினைப்போம்...
உயிராக..

வருங்கால சந்ததிக்கு...
சொல்லி வளர்ப்போம்...
தமிழின் பெருமையை.
தாய் மொழியின் அருமையை.!

எழுதியவர் : Marudha Karuppu (5-Jun-20, 2:28 pm)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 1579

மேலே