அவளின் கோபம்

அவளின் கோபம்.

அவள் கோபமும் எனக்கு கவிதை தான்.
தப்பி, தவறி வேறு ஒரு பெண்ணுடுன் நான் பேசிவிட்டால் போதுமே
அவள் பார்வையில் நண்பகல் சூரியனை பார்க்கலாம்.
அந்த வெப்பமான சூழ்நிலையை நான் ரசிப்பேன்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் நான் வரவில்லை என்றால் போதுமே
அவள் பார்வை போர் களத்தில் வில்லில் இருந்து பாயும் அம்பு போல் தாக்கும்.
அம்பு தாக்கினாலும் அதையும் ரசிப்பேன்.
எத்தனை முறை அவள் கோப பட்டாலும்
அவள் முகம் சில நிமிடம்
சூரியனாக இருக்கும்
பின் தானாக அழகிய குளிர் நிலவாக மாறிவிடும்.
உன் சிரிப்பை நேசிக்கும்
உன் காதலன் உன் அழகிய கோபத்தையும் ரசிக்கிறேன்.

- பாலு.

எழுதியவர் : பாலு (5-Jun-20, 8:02 pm)
சேர்த்தது : balu
Tanglish : avalin kopam
பார்வை : 108

மேலே