🌺 ஒளி வீசட்டும்

இந்த... ஞாயிறு
ஒளி வீசட்டும்...
கொரொனா இறப்புகள் இன்றி...

இங்கு பாவப்பட்டவர்கள்
எழை எளியவரும்...விவசாயிகளும் தான்...
எத்தனை இடர்கள்-?

அவ்வபோது வரும் புயல்..
எப்போதாவது வரும் வெள்ளம்...
சில சமயம் விளைச்சலை
கெடுக்கும் மழை.. வெயில்..
இப்போ புதுசா
கோரோன...
விலைவாசி உயர்வு..
வேலை இல்லா திண்டாட்டம்..
இரசாயன உரங்களால்
மலடாகிபோன விளை நிலங்கள்...
இதெல்லாம் போதாதென்று
புதிதாக
வெட்டுக்கிளி கூட்டம் வேறு..

பல சமயங்களில் - தன்
பலத்தை நிரூபித்துக் கொண்டே
இருக்கிறது
இயற்கை...!!!



எழுதியவர் : மருத கருப்பு (7-Jun-20, 1:53 pm)
சேர்த்தது : மருத கருப்பு
பார்வை : 67

மேலே