தாலி

அவள் பின்னால் அவன்
அவளைத் தொலைவிலிருந்தே கண்டு
அவள் பின்னால் அவன்.... அவன்
கண்கள் அவள் கழுத்தில் கட்டிய
மஞ்சள் கயிற்றில்.....இதோ
அவன் அதைப் பற்றி இழுத்தான்
அவன் கையில் மஞ்சள் கயிறு
அதன் நுனியில் கட்டிய கொம்பு மஞ்சள்
தங்கத் தாலிக்கு ஓர் மதிப்புண்டு
இந்த மஞ்சள் கொம்பு ....அவன் கட்டிய தாலி
இதற்கேது மதிப்பு ? என்றாள்
திருடன் அவள் காலைத் தொட்டு வணங்கி
போய்விட்டான் அங்கிருந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jun-20, 3:06 pm)
Tanglish : thaali
பார்வை : 223

மேலே