வாழத்தெரியலையே
வாட்டிடும் வறுமை
வாடித்தவிக்கும் ஏழைகள்
உடனடி இலவசம்
உயிர்களைக் காக்கும்—ஆனால்
நிரந்தரத் தீர்வாகுமா?
இல்லை ஏழைகள் எப்போதும்
இப்படியே வாழனுமா?
இதுபோல என்றும்
அப்பாவிப் பெண்களின்
வாழ்வை கெடுக்கும்
வரதட்சனைக் கொடுமை,
அனுதாபப்படும் சமூகம்
அதை அகற்றுவதற்கு
இன்னும் வழி தேடலையே !
கன்னிப் பெண்களின்
கற்பை சூறையாடிக்
கொல்லும் காமுகர்களைக்
கண்டுகொள்ளாதது—அவர்கள்
கங்கையில் புனித நீராடினார்களா ?
அறம் பேசும் நமக்கு
அறத்தின் படி வாழத்தெரியலையே !