அந்தியில் இவள் என் காதலி

சிந்தனையில் இவள் காவிரி
செந்தமிழில் இவள் பார்கவி
நந்தவனத்தில் இவள் தேனருவி
அந்தியில் இவள் என் காதலி !

சிந்தனையில் இவளோ காவிரி
செந்தமிழில் இவளோ பார்கவி
நந்தவனத்தில் இவளே தேனருவி
அந்தியில் இவளேஎன் காதலி !

----இப்பொழுது இது வஞ்சி விருத்தம் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-20, 10:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே