கவிச்சைப் பிரியா

மகப்பேறு மருத்துவ மனையில் ஒரு நிறைமாத கர்ப்பிணி செவிலியரிடம்:

எங்க பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம். நான் கொழந்தையா இருக்கிறபோதே எங்க குடும்பம் சென்னைக்கு வந்திருச்சு. சிஸ்டர் எனக்கு நல்லபடியா கொழந்தை பொறக்குமா? தலைப்பிரசவம். பயமா இருக்குது.
@@@@@@
அதப்பத்தி கவலைப்படாதே பிரியா.
@@@@@@
அய்யோ அம்மா. அய்யோ அப்பா வலி தாங்க முடியலயே. அய்யோ, அய்யோ.....
@@@@@@
(மருத்துவர்): யாருமா அங்க சத்தம் போட்டுக் கத்தறது? வலி இல்லாம கொழந்தை பெத்துக்க முடியுமா? கொஞ்சம் பொறுத்துக்கமா.
@@@@
டாக்டர், டாக்டர் என்னால தலைவலியைக்கூட பொறுத்துக்க முடியாதுங்க டாக்டர். தலைவலி வந்தா மருந்து மாத்திரை சாப்பிடமாட்டேன். ஒரு கருவாட்டை எடுத்து நெருப்பில சுட்டுத் தின்னா எந் தலைவலி பறந்தோடிப் போகும். பல்லு மொழைக்காத வயசிலிருந்தே கவிச்சையாத் தின்னு வளந்தவள் நான். அய்யோ. அய்யோ வலி பொறுக்க முடியலயே.
@@@@@
வலிக்கத்தான் செய்யும். இப்ப உனக்கு என்னவேணும்?
@@@@@@@
அய்யோ அம்மா. அய்யோ அப்பா.
@@@@@@
என்ன வேணும்னு சொல்லுமா.
@@@@@@
எங்க தெருவில எல்லாரும் என்னை 'கவிச்சை பிரியா'-ன்னுதான் கூப்புடுவாங்க. அய்யோ, அய்யோ. வலிக்குதே.
@@@@@@@
(செவிலியர்): இப்ப உனக்கு என்ன வேணும்னு சொல்லு கவிச்சை பிரியா
@@@@@@@
எனக்கு, எனக்கு ஒரு எண்ணெயில பொறிச்ச 'லெக் பீஸ்' (கோழித் தொடை) வாங்கிட்டு வரச்சொல்லுங்க. அதை என் வாயில வச்சிட்டா கொழந்தை பொறக்கற வரைக்கும் எனக்கு வலி தெரியாது.
@@@@@@
ராமலிங்கம், இங்க வாப்பா. வேகமா ஓடி எதிரில இருக்கிற பிரியாணிக் கடைல ஒரு 'லெக் பீஸ்' வாங்கிட்டு வா.
@@@@@@@
சிஸ்டர், நீங்க சொன்னதக் கேட்டதும் எனக்கு பாதி வலி கொறஞ்ச மாதிரி இருக்குது. (கொஞ்சம் மெதுவாக) அய்யோ அய்யோ. அம்மா.
■■■■◆◆◆◆◆◆■■■■■■■■■■■■■■■■
தமிழத்தின் வடமாவட்டங்களிலும், குறிப்பாக சென்னையிலும் இறைச்சி, கடல் உணவுகளை கவிச்சை என்று பலர் சொல்வர்.

எழுதியவர் : மலர் (21-Jun-20, 8:14 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 49

மேலே