குறுக்குவழி மோஹினி - 3

இப்படி காலம் நகர்கையில்
தன்னை விட வயது குறைந்தவன் ஒருவன் தன்னை துரத்துகிறான் என அவள் உள்மனது சொல்லியது
தூர நின்று பார்த்த சமேஷ் ஒரு நாள் அவளருகில் வந்தே நின்றாள்
வெட்கித்துப் போனாள் இமையழகி
பேசாமல் நின்றாள் சொல்லழகி
இரு மீன் ஒன்றொன்றாண்டாட
மீன்கள் துள்ளிகுதிக்க விடாமல் தடுக்கும் இரு இமைகள்
வேகத்தில் அனலாய் கொதித்த அவள் பார்வை
அவன் அவன் தோழியிடம் தூது அனுப்பினான் இவளிடம் , தாராவிடம்
உங்களுக்கு திருமணம் ஆகவில்லை தானே , என்றாள்
உங்களுக்கு காதலன் உண்ட என்றாள்
இருகேள்விக்கு ஒரு பதிலும் கூறாமல்
கழுத்தில் தங்கச்சி சங்கிலி உருகி நெருப்புக் குழம்பாக ஓடும் அளவுக்கு இருந்தது அவள் கோபம்.
அதைக்கண்டு சமேஷ் அலறிஅடித்துக் கொண்டு ஓடினான்.
இவள் அதோடு அவனை விட்டு விடவில்லை
தன் மேலதிகாரியிடம் வத்தி வைத்தாள்.
அவனை வெறுக்க வைத்தாள்
அதே சமயத்தி ஐம்பது வயது கோதண்டபாணி இவளுக்கு தினமும் ஒரு அம்பு எய்தான்
முதல் நாள் முதல் தன்னை முறைத்துப் பார்ப்பான்.
மேலதிகாரி என அவனை ஒன்றும் செய்யவில்லை.
ஆனால் தனது மேலதிகாரியிடம் மெல்ல வத்தி வைத்தாள்
இது ஒரு தொடர்கடியாக இருந்தது
தான் சாப்பிடப் போனாள் பின்னால் வருகிறான் என்றாள்
ஒரு நாள் பெயர் கேட்டான்
மறு நாள் அதன் அர்த்தம் என என்று கேட்கிறான் என்றாள்
வேண்டுமென எதிரில் வந்து புன்னகைகைக்கிறான் என்றாள்
அந்த வெள்ளை முடிகார கிழவன் என்னை தினமும் வாடி வடைகிறான் என்றாள்
மேலதிகாரியோ நான் உன் பின்னால் வந்து பார்க்கிறான்
என் நம்பியையும் வந்து பார்க்கச் சொல்கிறேன் என்றாள்.
அங்கும் இங்கும் இவளை பற்றி தெரிந்துக் கொள்ள அலைந்தார் ஆண்மகன்கள்
ஏனெனில் அவள்
"
பெரிய விழிகள்
எதையோ பேசத்துடிக்கும் இரு இதழ்கள்
தங்கத்தால் அழகுபடுத்திய மங்கையவள்
காரிகையவள் பாத்தாலே இதயம் நொறுங்கி விடும்
வைரம் பூட்டி
புருவம் உயர்த்தி
புன்னைகையே கேள்விக்குறியாய்
பூட்டி வைத்தாள் இதயத்தை
கொன்று விட்டாள் முதல் பார்வையில்
வைர பற்கள் மின்னி நிற்க
கோதையவள் கொன்றால் எதிரில்நின்றவரை பார்வையாலே
காலம் நின்று கோலமிடும்
தங்கமும் தன் அகந்தையைக் குறைத்திடும்
அழகி இவள் முன்னாலே"

நீண்ட குழலில் எல்லோர் மனதையும் சுருட்டி விடுவாள்
அழகுச் சிரிப்பாள் கவர்ந்திடுவாள்
இப்படி கிழவனும் வயது குறைந்தவனும் தனக்கு நீண்ட நாள் இடைஞ்சல் தர
தன் கூட இருக்கும் நண்பனே
தன்னை
தன் நம்பிக்கையை
தன் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த முனைவான்
என அவள் கனவில் கூட நினைக்கவில்லை

எழுதியவர் : கவிராஜா (24-Jun-20, 12:53 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 88

மேலே