நீ தான் பெண்ணே!

சுவாசிப்பது
நான் தான் என்றாலும்
என் சுவாசம்
நீ தான் பெண்ணே!

சிரிப்பது
நான் தான் எனறாலும்
என் மகிழ்ச்சி
நீ தான் பெண்ணே!

தேடுவது
நான் தான் என்றாலும்
என் தேடல்
நீ தான் பெண்ணே!

லட்சியத்திற்காக உழைப்பது
நான் தான் என்றாலும்
என் லட்சியம்
நீ தான் பெண்ணே!

ஆனந்த கண்ணீர் வடிப்பது
நான் தான் என்றாலும்
என் ஆனந்தம்
நீ தான் பெண்ணே!

வணங்குவது
நான் தான் என்றாலும்
என் தெய்வம்
நீ தான் பெண்ணே!

ஆசைப்படுவது
நான் தான் என்றாலும்
என் ஆசை
நீ தான் பெண்ணே!

கவிதை எழுதுவது
நான்தான் என்றாலும்
என்னை எழுத வைப்பது
நீ தான் பெண்ணே!

வாழ்வது
நான் தான் என்றாலும்
என் வாழ்க்கை
நீ தான் பெண்ணே!


கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-Jun-20, 8:05 pm)
பார்வை : 117

மேலே