அழகு மனிதன்

காப்பு காய்ந்த
கைகள்
நரைத்து போய்விட்ட
மீசை
அம்மை தழும்பு
முகம்
உழைத்து வளைந்து
போன முதுகு
மூக்கு கண்ணாடிக்குள் இருக்கும் கண்கள்

இவர்தான் என்
தந்தை

மேடையில் சாதித்த
பெண் கையை
பிடித்து அறிமுகப்படுத்த

அரங்கம் எழுந்து
கொடுத்த மரியாதை

அழகு அழகு
இவனின் அழகு

எழுதியவர் : தாமோதரன். (26-Jun-20, 8:59 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : alagu manithan
பார்வை : 71

மேலே