வாதியும் பிரதிவாதியும்

ஐந்து பவுண் சங்கிலி மற்றும்
மூன்று படி அரிசியால்
நடக்காது நின்ற போன திருமணம்
சம்பந்தப்பட்ட வழக்கில்
மூத்த அத்தையின் கணவரால்
ஒரு வழியாக தவறுக்கான
காரணம் கண்டறியப்பட்டது

பந்தக்கால் நட்டதும் சாஸ்தாவிற்கு
காப்பு சாத்தியிருக்க வேண்டும்

பிரதிவாதியும் வாதியுமாய்
மணப்பெண்ணின் அப்பாவும் தம்புரானும் !

எழுதியவர் : பெருமாள்வினோத் (26-Jun-20, 9:23 am)
பார்வை : 85

மேலே