பித்தன்
தம்முள் உருவாகித் தம்முள டங்கும்
அணுவிலணு வானதோரற் பர்களுக்குள் தாமே
தமையேஉள் என்றும்இல் என்றும் பிதற்றச்
செயுமிந்தப் பித்தனிவன் யார்.
விளக்கம்: இவ்வுலகில் உள்ள அனைத்தும் இறைவனாகிய தமக்குள் உருவாகி தனக்குள்ளேயே இறுதியில் கரைந்து போகும் நிலையில், மிகச்சிறிய மனிதப் பிறவிகள் இறைவன் இருக்கிறான் என்றும் இல்லை என்றும் தன்னையே பற்றி பேசவைக்கும் இந்த பித்தனைப்போன்ற இறைவன் யார்?