ஆசை
துன்புறுவதும் துன்புறுத்துவதும் சினத்தின் இயல்பு!
சினமுறுவதும் சினமுறுத்துவதும் ஏமாற்றத்தின் இயல்பு!
ஏமாறுவதும் ஏமாற்றுவதும் எதிர்பார்ப்பின் இயல்பு!
எதிர்பார்த்தலும் எதிர்பார்க்க வைத்தலும்
சார்தலின் இயல்பு!
தாம் சார்தலும் தமை சார்தலும்
பயன் நோக்கின் இயல்பு!
பயன் நோக்கி இருப்பதும் வைப்பதும்
ஆசையின் இயல்பே!