வாழ்க்கை ஓட்டம்

வாழ்க்கை ஓட்டம்
*****************
கொரன வந்ததால் எல்லாம் போயிட்டே.மூன்று பிள்ளைகளோடு பிழைப்புக்கு இனி என்ன செய்ய போகிறேன் .கொஞ்ச நாட்களாக
தனிமையில் அழுது கொண்டுஇருந்த சோமுவுக்கு .அவன் நண்பன் கொடுத்த தூண்டல் கொஞ்சம் உற்சாகம் கொடுக்கவே .துணிந்து கொண்டான் .. சரி சரி அடுத்த திங்கள்கிழமை ஊரடங்கு சட்டம் எடுத்து கொள்வார்கள் அப்பொழுது .ஒருக்கா அண்ணனின் வீட்டுக்கு சென்று .உதவி ஒன்று கேட்டு பாப்போம் .என்று இருந்தான் அந்த நாள் நெருங்கி வந்தவுடனே .நீண்ட தூரத்தில் இருக்கும் தன் அண்ணனின் வீட்டிற்கு வேகமாக போய் சேர்ந்து இருந்தான். .
அங்கே சோமுவின் அண்ணனும் மகனால் மனமுடைந்து தன் மனைவியுடன் சண்டை போட்டு தணிந்து இருந்தான் .எனினும் எதிர்பாராமல் தன் தம்பியை கண்டதும் அறியாத ஆனந்தத்தினால் மகிழ்வு கொண்டு .வாடா தம்பி என்ன இந்த பக்கம் வந்து இருக்க எப்படி இருக்கிறாய் . மனைவி பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரித்து முடித்தவுடன் உன்னை பார்த்தது மனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது .என்று கூறி முடித்தான் .அதற்கு பதிலாக அவன் தம்பியும் சோமுவும் .அண்ணா நான் நல்லா இருக்கிறேன் உந்தன் குடும்பம் எப்படி இருக்கிறது என்று கேட்ட வண்ணம் சம்பாஷணையை தொடர்ந்தான் ...
அப்பொழுது மூர்த்தியின் மனைவியும் தேனீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு தம்பி என்ன செய்யிறாய் எப்படி போகுது வாழ்க்கை ..
சோகம் முகத்தில் வழிய கண்ணீரோடு வினாவிவிட்டு இதோ சமைக்கிறேன் சாப்பிட்டுவிட்டு தான் போக வேண்டும் .சமையல் வேலை செய்ய தொடங்கினான்...
அதற்கிடையில சோமுவும் அண்ணா நீ தோலில் சுமந்த நாட்களை மறப்பேனோ ?நீ தந்த ஆறுதல்களை மறைப்பேனோ?நீ செய்த ஆர்ப்பணிப்புகளை வெறுப்போமோ .ஏன் ஏன் அண்ணியும் வாழ்வை இழந்தவள் போல சோகமாக இருக்கிறா ?விசாரிக்க தொடங்கினான் ...
மூர்த்தியின் உள் கிடங்கை சோமு கிளறி விடவும் .வேறு வழி இன்றி
கலக்கமான குரலுடன் அழத் தொடங்கினான் ..
வேறு ஒன்றுமே இல்லையடா தம்பி எனக்கும் முந்தைய மாதிரி வேலை செய்ய முடியாது .இந்த நேரம் என்னுடைய மகன் படித்து முடித்துவிட்டான் அவன் இனி குடும்பத்தை பார்ப்பேன் என்று இருக்க
ஒருகிழமைக்கு முன்பு தன் நண்பனை சந்தித்துவிட்டு வரப்போகிறேன் என்று போனவன் .பிறகு தன் கூட்டாளியோடு போன இடத்தில்
விபத்திற்கு உள்ளாகி உள்ளான் என்று அவனுடைய நண்பனின் உறவுகள் அலைபேசியில் கூறினார்கள் அதுதான்டா .என்ன நடந்திருக்குமோ அந்தரத்தோடு இருக்கிறேன் ..
அப்பொழுது அவனுடைய தம்பி நீ ஏன் அண்ணா இன்னும் வைத்தியசாலைக்கு சென்று பார்க்கவில்லை . .இரண்டு பேரும் சேர்ந்து போய் பார்த்துவிட்டு வருவோம் வாவன் என்று கூற .அதற்கு அவன்
மகனின் நண்பர்கள் நாட்டின் மோசமான நிலையில் இப்போதைக்கு வரவேண்டாம் .நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று கூறி விட்டார்கள் .என்ன தான் செய்வது என்று எனக்கு தெரியலையடா
கூறி முடிக்கவும்

அந்த .கணப்பொழுது சோமுவுக்கு அண்ணனின் இளமை காலத்தின் வாழ்வு நிழல் ஆடத்தொடங்கியது ...
வீட்டின் கரை காக்க உழைத்து நின்ற அப்பா .அதன் நிழலிலே வாழ்ந்த
பறவைகள் நாம் வலி தெரியாமலே ஆடி பாடி மகிழ்ந்து இருந்தோம்
கட கட வென செல்கள் விழத்தொடங்க ..கணித வாத்தியாரும் தம்பி தம்பி இராணுவம் முன்னேறி வருகிறது விரைவாக ஓடி போங்கோ கத்திய வண்ணம் கடந்து சென்றார் ..இதனால் பயத்தோடு நாங்களும் ஓடி சென்றோம் .இதற்கிடையில் அம்மா அப்பா எங்களை சித்தியோடு கவனமாக இருங்கள் ..நாங்கள்ஒருக்கா போய் வீட்டை பார்த்துவிட்டு வாரோம் என்று கூறி சென்றவர்கள், திரும்பி வரவேயில்லை, இதனால் இளமையிலே யுத்தத்தில் தாய் தந்தையை இழந்து நின்ற வேலை ..தனிமரமாக நின்று சகோதரங்களை தாங்கினான் .வறுமை போக்கி குளிரை செய்த அண்ணன் வீட்டாருக்கு இந்த நிலைமையோ ?விரத்தியாய் நின்ற வேலை அவனின் அண்ணியும் .சாப்பாடு தாயாரகி விட்டது வா சாப்புடுவோம் அழைக்க தொடங்கினாள் ...
எழுத்தாளர் அகிலன் ராஜா

எழுதியவர் : எழுத்தாளர்அகிலன் ராஜா (28-Jun-20, 10:51 pm)
Tanglish : vaazhkkai oottam
பார்வை : 100

மேலே