அடுப்பங்கறையே அழகு நிலையம்

அடுப்பங்கறையே அழகு நிலையம்....

எனக்குத் தெரிந்து , நான் கல்லூரி படிக்கும் நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அழகு நிலையங்கள் இருந்தன.... சினிமா நட்சத்திரங்கள்,கல்லூரி மாணவிகள் மற்றும் மணப்பெண்கள் மட்டுமே செல்லும் இடமாக இருந்தது....
ஆனால் இன்று அப்படி இல்லை...திரும்பிய திசையெல்லாம் அழகு நிலையங்கள் ....அனைத்தும் நிரம்பி வழிகிறது....
அழகு நிலையம் செல்வது இன்றைய பெண்களுக்கு அத்தியாவசிய தேவைபோல் ஆகிவிட்டது... வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல..... குடும்ப வறுமை நீக்க சொற்ப வருமானத்திற்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் கூட... தன் வருமானத்தின் பெரும்பங்கை அழகு நிலையத்திற்குச் சென்று மொய்யெழுதி விடுகிறார்கள் .... காரணம் நம் வெளித்தோற்றமும் நடை,உடை,பாவனைகளுமே மற்றவர்கு நம்மைப்பற்றிய முதல் அறிமுகமாகிறது.

அழகு நிலையமே இல்லாத அக்காலத்தில் பெண்கள் அழகாக வசீகரமாக இளமை தோற்றம் மாறாது இருந்ததில்லையா...???
இப்போது உள்ள பெண்களைவிட உடல் ஆரோக்கியத்தோடும் இயற்கை அழகோடும் அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மையிலும் உண்மை.... முதுமையில் கூட அவர்கள் முகத்தில் ஒரு பொலிவும் கனிவும் இருந்தது.....
அவர்களது அழகு நிலையம் அடுப்பங்கறைதான்.....

அதெப்படி அடுப்பங்கறை அழகு நிலையம் ஆகிவிடும் ...?
உங்கள் கேள்விகளுக்கான பதில் இதோ.....👇👇👇

1.காலை 6மணிக்குள் விழித்து காலைக்கடன் முடித்து ,நேராக சமையலறைக்குள் நுழைவதுதான் பெரும்பாலான பெண்களின் பழக்கம்.... சென்றவுடன் முதலில் ஒரு கிளாஸ் நீர் பருகுங்கள் ...
2.எல்லோருக்கும் காலை முதல் வேலையாக காஃபி போட பாலை கொதிக்க வைப்பதுதான்...பாலை சட்டியில் ஊற்றுவதற்கு முன் அதில் ஒரு டீஸ்பூன் பச்சை பாலை தனியாக எடுத்து முகம் முழுவதும் தேய்த்துவிட்டு , பணியை தொடருங்கள் ....அதுதான் நல்ல க்ளன்சிங் மில்க்
3. அடுத்து காலை டிபன் ... தோசையோ இட்லியோ என்றால் ... அந்த மாவை 2 டீஸ்பூன் எடுத்து முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யுங்கள் .... a very good scrubber இதுதான்.... அடுத்து இட்லி ஊத்தி இறக்கியப்பின்... சட்டிக்கு அடியில் கொதிநிலையில் நீர் இருக்கும்... அதை அப்படியே அடுப்பில் விட்டு... வரும் ஆவியில் முகத்தை இலேசாக காட்டுங்கள் ..... natural steaming
4. மதிய உணவு தயாரிக்கும்போது பச்சை மிளகாயை தவிர மற்ற எந்தக் காய்கறிகளை வெட்டினாலும்.... கையில் ஒட்டும் அனைத்து சாற்றையும் முகத்தில் தேய்க்கலாம்... உருளைக்கிழங்கு , வெள்ளரிக்காய் வெட்டினால்
வெளிவரும் சாற்றை கண்களை சுற்றி தேய்க்கலாம்.... பீட்ரூட் கேரட் வெட்டினால் சாற்றை உதடுகளில் தேய்க்கலாம்.
5. தாளிக்கப் பயன்படும் எண்ணெய் எதுவாயினும் வறண்ட சருமம் உள்ளவர்கள் சில துளிகளை உள்ளங்கையில் இட்டு அதில் இரண்டு சொட்டு பாலை விட்டு , இரண்டு கைகளாலும் அதை சூடுபறக்க தேய்த்தால் வரும் எமல்ஷனை முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம்... natural best moisturizer
6. அரிசியை கழுவும்போது, இரண்டாவது அலசும் நீரை எடுத்து வைத்து... ஓய்வு கிடைக்கும்போது கூந்தலில் தடவலாம்... சாதம் வடித்த நீரை மோருடன் பருகலாம்... கேசத்திலும் தடவலாம்.... சாதம் சமைத்தவுடன் சுடசுட ஒரு கையளவு சாதத்தை எடுத்து நன்றாக மசித்து , அதனுடன் ஒரு ஸ்பூன் பாலும், ஒரு ஸ்பூன் தேனும் கலந்து ...மிக்சி சிறிய ஜாரில் போட்டு பேஸ்ட்டுபோல் அரைத்து நன்றாக சூடு தணிந்தப்பின் முகம் முழுவதும் தடவி அப்படியே 15 நிமிடம் காயவிட்டு, தூய நீரில் கழுவினால்...முகம் பளிச்சிடும்... natural best face mask... இது முக சரும சுருக்கத்தை வெகுவாக குறைக்கும்...
7. கண்களைச் சுற்றி கருவளையம் இருந்தால்... ஒரு சுத்தமான ஸ்டீல் ஸ்பூனை ஃப்ரீசரில் போட்டு வையுங்கள்.... சமையல் செய்வதற்கு இடையே அவ்வப்போது அதை எடுத்து கண்களை
சுற்றி இலேசாக ஒத்தி எடுங்கள் ... ஸ்பூன் குழியை அப்படியே இமைக்கு மேல் மூடி மூடி எடுங்கள் .... கருவளையம் விரைவில் நீங்கிவிடும்...
8.இரண்டு ஸ்பூன் பீட்ரூட் சாற்றில்,ஒரு ஸ்பூன் கெட்டி நெய்யும் அரை ஸ்பூன் தேனும் கலந்து நன்றாக அடித்துக் கலந்து ஃபிரீசரில் வைத்துவிடுங்கள்..... natural lipstick ready.
9. இரண்டு வாரத்திற்கு
ஒருமுறை சோற்றுக் கற்றாழை முட்டை வெள்ளைக்கருவையும் நன்றாக மிக்ஸியில் அடித்து கூந்தலில் தேய்க்கலாம்....
10. தேங்காய் பாலை தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்தால்... கூந்தல் பளபளப்பாய் இருக்கும்
11. உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு. ஆதலால் அளவான , நம் உடல் உழைப்பிற்கு அவசியமான அளவு ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்...

நான் கூறிய அழகு குறிப்புகள் அனைத்தும் உங்கள் அடுப்பங்கறையில் கிடைக்கும் பொருள்களிலேயே செலவில்லாமல் செய்யக்கூடியவை தானே....

அடுப்பங்பறையை அழகுநிலையாக்குவோம்... ஆகாத செலவுகளை குறைப்போம்...

ஆனால் எவ்வளவு தான் முகத்தை பொலிவேற்றினாலும்.....அழகான அகமும்.... இளமை மாறா சிந்தையும்..... ஆரோக்கிய உணவுமே... பொலிவை மேலும் கூட்டி உங்களை தன்னம்பிக்கையோடு செயல்பட வைக்கும்....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (30-Jun-20, 10:56 am)
பார்வை : 92

மேலே