நகைச்சுவை துணுக்குகள் 14

அரசாங்கம் திட்டக் குழு ஒண்ணு அமைக்கப் போறாங்களாமே.

இது என்ன அநியாயமா இருக்கே.

இதுலே என்ன அநியாயம் இருக்கு?

திட்டறதுக்குக் கூட ஒரு குழுவா?
***************

இங்கே எச்சில் துப்பவும்னு போர்டு போட்டிருக்கே, இந்தப் போர்டைப் பார்க்காமலே போறீங்களே.

அதைப் பார்த்து நான் என்ன பண்ணணும்?

இங்கே வந்து எச்சில் துப்பிட்டுப் போங்க.
************
இந்தப்புத்தகத்துலே "பொறுக்கி எடுத்த பத்துக் கதைகள்"னு போட்டிருக்கு. இருந்திருந்தும் ஒரு பொறுக்கி எடுத்த பத்துக் கதைகளையா போடணும்? அதுக்குப் பதிலா ஒரு நல்லவன் எடுத்த நாலு கதைகளைப் போட்டிருக்கக் கூடாதா?.
********************
அந்த டாக்டர் போலி டாக்டரா இருப்பாரோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.

எதனாலே அப்படிச் சொல்றே?

ஒரு ஜலதோஷம்னு அவர்கிட்டே போனா Chest X-ray, ECG, தலையிலிருந்து கால் வரையிலும் Scan எடுக்கணும், மத்த எல்லா டெஸ்டும் பண்ணணும் அப்படீன்னு எல்லாம் சொல்லாம, ஒரு மருந்தை, அதையும் புரியற மாதிரி எழுதிக் கொடுத்து "ரெண்டு நாள் இந்த மருந்தை சாப்பிடுங்க. அப்புறம் வந்து என்னைப் பாருங்க" ன்னு சொல்றார்னா பாத்துக்கோயேன்.
********************
எழுதியவர் : ரா. குருசுவாமி( ராகு) (30-Jun-20, 1:53 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 52

மேலே