புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 13---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௧௩
121. மற்றவரின் குறைகளைக் கேலி செய்பவன்
தன் உள்ளத்தின் குறைகளை மறந்து விடுகிறான்.
122. சாட்சிகள் எப்போதும் உண்மையாக இருக்க முடியாது
உண்மைகள் மட்டுமே சாட்சியாக இருக்க முடியும்.
123. ஆசைகள் அதிகரித்து விட்டால்
ஒன்றை விட ஒன்று அழகாகத்தான் தெரியும்.
124. ஆதாயம் இல்லாமல் அரசியல் நடக்காது
ஆரம்பம் இல்லாமல் பயணம் முடியாது.
125. புள்ளிகள் தெளிவாக இருந்தால் கோலம் சிக்கலாய் இருக்கிறது
புள்ளிகள் மறைவாக இருந்தால் கோலம் பூக்களாய் இருக்கிறது.
126. கடலுக்குள் சென்ற மீனவர்களை விட
சிறைக்குள் சென்ற மீனவர்கள் அதிகம்.
127. அழகுக்குப் பின்னால் ஒரு ஆபத்தும் வரவேற்க காத்திருக்கும்
அழிவுக்குப் பின்னால் ஒரு அமைதியும் வரவேற்க காத்திருக்கும்.
128. நம்பிக்கை என்ற முதல் அடியை எடுத்து வை
வானமும் உனக்கு வாசல் தான்.
129. உன் செயல்களே உனக்கான மதிப்பைப் பெற்றுத்தரும்.
130. வாழ்க்கை என்ற புத்தகத்தில் சங்கடங்களையே புரட்டிப் பார்த்தால்
சந்தோசம் நிலைக்காது.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..