சும்மனாச்சும்

சும்மா இருக்கும்பொழுது
கவிதை எழுதுகிறேன்
சும்மா இருக்கும்பொழுது
கதை பேசுகிறேன்
சும்மா இருக்கும்பொழுது
வேடிக்கைப் பார்கிறேன்
சும்மா இருக்கும்பொழுது
சுவாசம் செய்கிறேன்
சும்மா இருக்கும்பொழுது
தூங்கி வழிகிறேன்
சும்மா மட்டும் இருப்பதில்லை
சும்மா இருக்கும்பொழுது

எழுதியவர் : பெருமாள்வினோத் (1-Jul-20, 5:40 pm)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 78

மேலே