இறை
இறையென்றே இங்கொன்றும் இல்லையென் பாரும்
இறையென்ப தேஅனைத்தென் பாரும் - மறைய
இறையென் பதேதாம் தொழுவதொன்றே என்பார்
இறையை மறுத்தல்
முறை.
விளக்கம்:
கடவுள் என்ற ஒன்றே இங்கில்லை என்றும் கடவுள் இன்றி இங்கு எதுவுமே இல்லை என்றும் சொல்பவர்கள் கருத்து இங்கு மறையும்படி தாம் வணங்குவது மட்டுமே கடவுள் என்று சொல்பவரின் கடவுளை மறுப்பதே முறை.