கரிச்சான் குருவி

வெட்டுக்கிளி பற்றி பேசும் பொது கரிச்சான் குருவியைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது ..

கரிச்சான் குருவி யின் பிரதான உணவு வெட்டுக்கிளி தான் …

ஒரு மணிநேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் .

ஒரு நாளைக்கு ௩௦௦௦ வெட்டுக்கிளிகளை உண்ணக் கூடியது என்பது ஆச்சர்யமான விஷயம் .

வயிறு நிரம்பிய பிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்று இரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடும் . அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது என்பது கூடல் தகவல் .

சமீப காலமாக கரிச்சான் குருவிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது , வெட்டுக்கிளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது . இயற்கை உணவு சங்கிலி தொல்லைக்கு ஆளாகிறது .

கரிச்சான் குருவிக்கு மாட்டுக்காரன் , இரட்டை வாழ் குருவி , வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாம் பெயர்கள் உண்டு .

அறிவியல் ரீதியாக கரிச்சான் குருவியின் பெயர் " Decrurus macrocercus என்பதாகும் .

இதன் நிறம் பள பள வென மின்னும் கருப்பு நிறம் . புறாவை விட சற்று சிறிதான உடல் , நீளமான வால் சிறகுகள் . அலகுகள் ஆரம்பிக்கும் இடத்தில் மீசை போன்ற ரோமங்கள் உண்டு . இந்த ரோமங்கள் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கும் போதே அவற்றை பிடிக்க உதவுகின்றன .கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில் ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும் .

அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி , வண்ணாத்திப் பூச்சி இவற்றை கிளப்பிவிட அவை பறக்கும்போது கரிச்சான் குருவிகள் இறக்கைகளை விரித்தபடி வைத்துக் கொண்டு கிளைடர் விமானம் போல பறந்து சென்று பூச்சிகளை பிடித்து கொண்டு அதே மூச்சில் தான் இருந்த இடத்திற்கே வந்து சேரும் பூமராங் என்னும் ஆயுதம் போல . மின் கம்பிகள் , விளக்கு கம்பங்கள் இவற்றின் மீது பார்க்கலாம் . அவ்வப்போது சிறிது தூரம் பறந்து சென்று இருந்த இடத்திற்கே திரும்புவத்தை காண முடியும் . உட்கார்ந்த இடத்தில் இருந்து புறப்பட்டு பறக்கும் பூச்சிகளை பிடிக்க கடிகார முள் போன்று இடமிருந்து வலமாக பறக்கின்றன . இந்த குருவிகளுக்கு பயம் என்பதே துளியும் கிடையாது . இந்த குருவிகள் தன்னை விட உருவத்திலும் பலத்திலும் பெரிதான காகம் , கழுகு , பருந்து போன்ற பறவைகளைத் துரத்தித் துரத்தி விரட்டும் . இந்த காரணத்தால் கரிச்சான் குருவி " king crow " என்று அழைக்கப்படுகிறது .

உருவத்தில் சிறிதாக இருந்தாலும் உள்ளத்தில் உரம் இருந்தால் உன்னைவிட பலசாலியான எதிரியும் ஓட ஓட விரட்ட முடியும் என்பதை நமக்கு இப்பறவைகள் சொல்கிறார்கள் . சில பறவைகள் தங்களது சிறகுகளில் பெண் போன்ற சிறு பூச்சிகள் சேராமல் தடுக்க ஒரு உத்தியினைக் கையாளும் . அவை எறும்புப் புற்றின் மீது சென்றமரும் . அப்போது அவற்றின் மீது எறும்புகள் வெளியிடும் பார்மிக் அமிலத்தில் பேன்கள் இறுமாந்து விடுகின்றன . கரிச்சான் குருவியும் அப்படித்தான் .

உணவு சங்கிலியில் ஒரு சங்கிலி அழிக்கப்படுவதின் விளைவுகளை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் .

கரிச்சான் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்போம் , அவற்றின்மீது அன்பு செலுத்துவோம் , அவற்றுக்கான , அவற்றின் இடத்தை பிடுங்காமல் இருப்போம் .

எழுதியவர் : வசிகரன்.க (1-Jul-20, 9:32 pm)
பார்வை : 147

மேலே