தனிமை

பாதிஇரவு பஞ்சணையில் நான்
எனைகேளாமல் உள்ளக்கதவை திறக்கிறாய்...
உதயமாகுது உனதுராகம் நெஞ்சில்..!

இதயநாணில் பல்லவியை இசைகிறாய்
இதயதாகம் கூட தேகம்இசைய...
இனிமைராகம் பாய்ந்தோடுது நரம்பினில்..!

மீளாகாதல் சந்தத்தில் சரணமாய்
உன்நினைவுகள் ஓங்கி ஒலிக்க...
பதைபதைக்குது விழிகள் தேடலில்...

மஞ்சணை குளித்த பாதிபஞ்சணை
மீண்டும்மீண்டும் பார்த்து சிரிக்குது...
பாவை உந்தன் பங்கயவிழிகளை நினைவூட்டி..!

வெற்றிடம் கண்டு நெஞ்சம் வெறுமையாக
நீளும்யாமம் கண்களில் கார்வார்க்க...
தனிமையின் கோரப்பிடியில் முழுமையாய் நான்..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (2-Jul-20, 6:40 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 2649

மேலே