சட்டம் இருட்டறை அல்ல

சட்டம் பற்றியது

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .......... திருவள்ளுவர்

சட்டம் ஒரு இருட்டறை ........ அண்ணாத்துரை

சட்டம் ஓர் இருட்டறையாம் அதில் வக்கீல்கள் எரியும் மெழுகு வர்த்திகளாம். உண்மையை
அவர்கள் உலகுக்கு விளக்கு வார்களாம். அப்படி செய்தால் வக்கீல்கள் பூவாவுக்கு எங்கே
போவார்கள். நான் பேசுவது சிவில் வழக்கு அல்ல கிரிமினல் வழக்கு பற்றி. சிவில்
வழக்கீல் ஒருவர் உண்மைகளை சேகரிக்க வேண்டும் . மற்றொரு வக்கீல் அந்த உண்மை
களை மடக்கி மடக்கி கேள்விகள் கேட்டு சாட்சிகள் உண்மையை மறந்து மாற்றி சொல்ல
வைப்பார். இதில் எங்கே இருட்டறை வெளிச்ச அறை உள்ளது. சாட்சிகளை(உண்மை)
வக்கீல் சமட்டியால் உடைத்தெறிவார். அப்போது உண்மை அந்தரத்தில் ஊஞ்சலாடும்.
பிறகென்ன மேல் கோர்ட்டுகள் சென்று நீதிகேட்க வேண்டும். அங்கு புதியசாட்சிகளை
புகுத்தவா முடியும் முடியாது. உண்மை சாக வேண்டியதுதான். நல்ல நீதிபதி யென்றால்
மறு விசாரணைக்கு உத்தரவிட லாம். அதையும் அந்த வக்கீல்கள் கேட்டால் தான் செய்வார்.
நல்ல நீதிபதி என்றால் அவரே உத்தரவிடுவார்.அப்படிசெய்ய வக்கீல் வருமானம் குறையும்.
அதனால் அவர் அங்கேயே ஒருகைப் பார்ப்பதாக சொல்லி வழக்கை சாகடித்து விடுவார்..

சட்டம் ஓர் இருட்டறை என்றால் அதையேன் காலம் காலமாக சட்டங்கள் வகுத்து நடை முறை
படுத்து கிறார்கள். சட்டம் இருட்டறையல்ல அது எரியும் பன்முகத் திருவிளக்கு.. அந்தப்
பன்முகச் சுடர்விளககின் திரிகளைத் தூண்டி சட்டத்தை நிலை நாட்டும் வேலையை
அரசாங்க அதிகாரிகள் (போலீஸ் துறையினர்) பிரகாசமாக்கி அது அணையாதவாறு
நீதிமன்றம் கொண்டு சேர்க்கவேண்டும். அங்கு அவர்களே வெளிச்சம் போட்டு காட்டி
நிரூபணம் செய்கிறார்கள்.

கிரிமினல் வழக்குகள் பற்றி பேசுவோம்.. காவல் நிலையத்திற்கு ஒருநபர் வந்து யாரோ
ஒருe toநபர் இரத்த காயங்களுடன் பாலத்தடியில் செத்துக் கிடக்கிறான் என்று சொல்லுவான்..
போலீசார் உடனே FIR புத்தகத்தில் பாலம் அடியில் காயத்துடன் பிணம் என்று பதிவிட்டு
நீதிபதிக்கு அனுப்ப வேண்டும் அப்படி காவலர்கள் பதிந்து பல ஊர்களுக்கு அப்பால் உள்ள
நீதிபதிக்கு 24 மணி நேரத்தில் அனுப்ப வேண்டும்.. அப்படி அனுப்ப வேண்டும் என்பது சட்டம்
ஆனால் அப்படியே எழுதி FIR பதிந்து அனுப்பினால் வழக்கு தோல்வி அடைவது நிச்சயம்.
யார் வந்து மெழுகு வத்தியல்ல தீவட்டி ப் பந்த வெளிச்சம் போட்டாலும் வழக்குத் தோற்றுப்
போவது நிச்சயம். இதை தூக்கி நிறுத்த நல்ல காவ துறையின் ஆய்வாளர்களால் முடியும்
கெட்ட ஆய்வாளர் அவனே கெடுத்து சாகடித்து விடுவான். அதை யிங்கு விவரிக்க முடியாது.

ஆய்வாளர் விசாரணை தொடங்கி கொலை செய்தவன் யார் ? விரோதியார்.? விரோதம்
என்ன. ? கொலையுண்டவன் எங்கிருந்து புறப்பட்டான்.? என்ன காரியமாக சம்பவ
இடத்திற்கு எப்படி எந்த நேரத்தில் சேர்ந்தான்.? அப்போது அங்கே யார் யார் இருந்தார்கள் ?
குற்றவாளி எப்போது எந்த கூட்டாளிகளுடன்இறந்தவனை அங்கு சந்தித்தான். ? என்ன
ஆயுதம் வைத்திருந்தார்கள் ? எப்படி வந்தார்கள். யார் யார் எந்த ஆயுதத்தால் தாக்கி
கொலை நடத்தினார்கள்.? அந்த இடத்தில் இரத்தம் கீழே இருந்ததா?அல்லது வேறு
இடத்தில் கொலை செய்து இங்கு பிணத்தை கொண்டு வந்த கிடத்தினார்களா? கொலை
செய்ய உபயோகப்படுத்திய ஆயுங்கள் கைப்பற்றப் பட்டதா? சம்பவ இடத்தில் இருந்த
இரத்தமும் இறந்தவர் உடையில் இருந்த இரத்தமும் ஒன்றா ?இரத்தம் பரிசோதிக்கப்
பட்டதா ? பிணம் கூறாய்வு செய்யப் பட்டதா. எந்த காயத்தால் இறந்தார் என்று உறுதி
செய்யப்பட்டதா ? உறவினர் சாட்சி அக்கம் பக்க சாட்சி கள் யார் யார் என்ன சொல்கிறார்கள்?
கொலையை நேரில் பார்த்த சாட்சி ? எதிரியின் உடைகள் கைப்பற்றப்பட்டு இரத்தக்
கறை கண்டறியப் பட்டதா ? எதிரியின் வாகுமூலம் என்ன ? அதன் பேரில் ஏதாவது
உண்மைகள் கண்டு பிடிக்கப்பட்டதா ? இறந்தவரின் பொருட்கள் ஏதாகிலும் எதிரியிடம்
கைப்பற்றப் பட்டத? இப்படிப் இன்னும் பல நுணுக்கமான கேள்விகளை எழுப்புகிறது சட்டப்
புத்தகம். (Indian Evidence Act). இதுவா இருட்டறை. சட்டம். மேலே சொன்ன சாட்சியங்கள்
அத்தனையையும் குறுக்கு விசாரணை என்ற பெயரில் ஒவ்வொன்றையும் இல்லை என்று
வாதிட்டு பொய் என்று சொல்ல முற்படும் வக்கீல்கள் எப்படி வெளிச்சம் காட்டும் மெழுகு
வர்த்திகளாக முடியும். உண்மை என்ற பிரகாசமான சட்டத்தை குறுக்கு விசாரண
என்னும் புயல் காற்றால் ஊதி அணைக்கிறார்கள்.

நீதிபதி என்ற பெயரில் வழக்கை நடத்தும் தில்லு முல்லு நீதிபதி இவழக்கில் குற்றவாளி
ஒன்றும் குற்றம் இழைக்கவில்லை என்று தள்ளுபடி செய்திருப்பார் ஆனால் அதே
வழக்கிற்கு குற்றம் சந்தேகமில்லாது நிரூபணம் ஆனது என்று மேல் கோர்ட்டில்.
அதே குற்றவாளிக்கு 10 கோடி அபராதம் நான்கு வருடம் ஜெயில் என்பான். உண்மைதானே.
இதற்கு வழக்கு முடிய 25 வருடம்தேவைபடுகிறது.

சட்டத் தால் உண்மையை வெளியே கொண்டு வந்து மக்களுக்கு நியாயம் வழங்குவது
சட்டக் குற்றங்களை ( சட்ட ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு) காவல் துறையினரே. வக்கீல்கள்
குற்றவாளிகளை காப்பாற்ற கொஞ்ச நஞ்ச வெளிச்சம் போடும் விளக்குகளை
அனைக்கும் தொழிலாளிகள். அவர்கள் மெழுகு வெளிச்சத் தோடு ஒப்பிட முடியாது.

வாய்ச்சொல்லில் மெய்ப்பொருள் காண்பதே அறிவு. சட்டம் இருட்டறை கிடையாது.
அநேக கோர்ட்டுகளே இருட்டறை

எழுதியவர் : பழனிராஜன் (2-Jul-20, 12:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 122

மேலே