இயற்கை

மாமழை மேகம் சூரியனை மறைக்க
மாமலர் கமலம் மொட்டவிழ முடியாதிருக்க
மேகத்திற்கு பின்னே கதிரோன் கண்ணீர்விட
அதுவே முத்துமுத்தாய் கமல மடலமீது
விழவே அந்த முத்து ஸ்பரிசத்தில்
பத்மமும் இதழ்கள் விரித்தது வெகுஅழகாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jul-20, 6:26 pm)
Tanglish : iyarkai
பார்வை : 188

மேலே