மீண்டும் ஒரு காதல் கவிதை

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

*கவிதை*


படைப்பு: *கவிதை ரசிகன்*

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

என்னவளே!
என் வானத்தில்
நீ தான் பால் நிலா...
பகலிலும் வருகிறாய்
என் வானில் உலா...

என் தோட்த்தில்
நீதான் பூக்களாய்
உதிராமல் இருக்கிறாய்
வெகு நாட்களாய்....

உன் நிஜத்தோடு நானும்
நிழலாக வேண்டும்
உன் மனதோடு நானும்
நினைவாக வேண்டும்....

நான் வாடினாலும்
உன் கூந்தலில் பூவாகி வாடனும்
நான் சிதைந்தாலும் -உன் வாசலில் கோலமாகி சிதையனும்

கனவாகி வருகிறேன்
உன் கண்களுக்குள்
இடம் தருவாயா...?
காதலாகி வருகிறேன்
உன் இதயத்துக்குள்
இடம் தருவாயா....?

கண்ணோடு இமை போலே
நாம் சேரனும்...
கடேலோடு நதி போலே
நாம் கலக்கனும்...
உயிராக உடலாக
நாம் வாழனும்...

*கவிதை ரசிகன்*


❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡

எழுதியவர் : கவிதை ரசிகன் (4-Jul-20, 8:59 pm)
பார்வை : 66

மேலே