ஐம்பதிலும் ஆசை வரும் 💘

ஐம்பதிலும் ஆசை வரும் 💘

முந்தானைக்குள் எனை முடிந்து
மோகங்கள் பல கற்று தந்து
எனை இன்ப உலகிற்கு அழைத்து சென்ற
என் அழகு தேவதையே!
காதல் பாஷை பல பேசி
என் வாலிபத்தை முறுகேற்றி தேன் ஆற்றில் மிதக்க செய்த எழில் ஓவியமே !
முத்தமிழில் என் காதோரம் தினம் கவி பல பாடி நம் காம கலியாட்டத்தை உச்சம் தொட செய்த இன்ப சுரங்கமே!

இன்று, மூப்பு இருவரையும் அப்பிகொண்டது.
உண்மை தான்.
உள்ளத்தில் உந்துதல் இருந்தாலும்
உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.
நீயும் குடும்ப சுமையை சுமக்கிறேன் என்று என்னை சுத்தமாக மறந்துவிட்டாய். 
கலாச்சாரம், பண்பாடு என சொல்லி எனை ஒதுக்கிவிட்டாய். ஓரம்கட்டிவிட்டாய்.

அடியே என் ஆசை மனைவியே!
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசை துளிர் விடும்
இதுவும் இயற்கை தான்.
ஆசைக்கு ஏது வயது .
வயது எண்ணிக்கையே தவிர வேறென்ன.
சில வெள்ளி கம்பிகள்
தவிர்த்து இன்றும், என்றும் நீ எனக்கு என் அழகு சுந்தரி தான்.
நானும் இன்னமும் இளமை மாறா கிழவன் தான்.
இல்லை, இல்லை.... இளமை உள்ள நிரந்திர இளைஞன்.
வா பெண்னே வா வள்ளுவனின் காமத்துபால் பயிலுவோம்
தொலைத்து விட்ட காதலை மீண்டும் ஆரம்பம் செய்வோம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (4-Jul-20, 11:23 pm)
சேர்த்தது : balu
பார்வை : 82

மேலே