சுவர் இல்லாத சித்திரம்

மனிதா..! மனிதா..! !
கொரோனா என்ற
அரக்கனால்
உன் சுதந்திரம்
அரசாங்கத்தால்
முடக்கப்பட்டு
விட்டதே என்று
எள்ளளவும்
வருத்தம் வேண்டாம்.

நீ ...பூமியில்...
சுதந்திர காற்றை
ஆரோக்கியமாக
சுவாசித்து நடமாட
வீட்டில்தான்
இருக்க வேண்டும்..! !

தனிமை ஒன்றுதான்
கொரோனாவை
அழிக்க கூடிய
சிறந்த ஆயுதம்..! !

சிந்தித்து செயல்பட்டு
நம்மையும் காத்து
சமுதாயத்தையும்
காப்போம்...! !

சுவர் இருந்தால்தான்
சித்திரம் வரையமுடியும்
இல்லை என்றால்
சுவர் இல்லாத
சித்திரமாக
மாறிவிடுவாய்..! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Jul-20, 8:38 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 33

மேலே