காதல்

வானத்திலிருந்து இந்த நிலாத்துண்டு
மண்ணில் விழுந்தது எப்போது
அந்த துண்டு வளர்ந்தது எப்போது
இப்போது என்முன்னே நான் காணும்
இந்த நிலவுப்பெண் அவள்தானோ
மண்ணில் நிலவாய் பவனி வரும் இவள்

மண்ணில் விழுந்த நிலாத்துண்டு ......
மயில் இறகு துண்டு 'மயிலாய்
வளர்ந்து தோகை விரித்தாடினாற்போல;
நிஜம் எது என்று கேட்கிறாயா பெண்ணே
அதுதான் நீ பேரழகி அந்த நிலாவும்
வெட்க்கிடும் அழகி .....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jul-20, 10:33 pm)
Tanglish : kaadhal
பார்வை : 199

மேலே