தூது செல்லாயோ செல்ல அலையே

ஊதைக்காற்றின் குளிர் கண்டு
நடுங்கும் புன்னைமலர்கள்
ஒன்றோடொன்று முயங்க..!
மங்கை நானோ
நாவாயில்
உன்வரைவை நாடி!

உனைக் காணா என்விழிகள்
முப்பொழுதும் பனிமழையில் நனைந்த
மலரிதழாய் ஆனதே ..!

உன் ஸ்பரிசம் துறந்த
கைவளை
வாடையின் வாட்டலில்
நெகிழ்ந்தே போனதே..!

நீதீண்டா என் பனிமலர் தேகம்
பசலைத் தீயில் தினமும்
வெந்தே சாகுதே..!

பாதி உசுரு போகினிலும்
பாவி நெஞ்சம் மட்டும்
ஏனோ உன்வரவை நாடுதே..!

கேலி செய்யும் சிற்றலையே...
ஆழி கடல் சென்றவன் காதில்
என்நிலை கொஞ்சம் நீ சொல்லாயோ...
கண்ணாளனை விரைந்துவரச் செய்யாயோ..?

உயிரின் வாசம் நான் அடைய
மெலியும் என்தோள்வளை பற்றி
அவனிதழால் என்னிதழை
போர்த்திவிடக் கூறாயோ..?

விரைந்து செல்லாயோ செல்லஅலையே...
அழைத்து வருவாயோ கள்வனை...
உயிர் பிழைப்பேன் நான்
என்னவன் சுவாசம் கொண்டு..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (7-Jul-20, 6:47 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 252

மேலே