இயற்கையின் நியதி

தெளிந்த நீரோடையும்
தேங்கிய சாக்கடையும்
சேருமிடம் ஒன்றாகும்
கடலென்றே பேராகும்
ஏதும் பிரிதல் இல்லை
இயற்கையின் நியதியிலே

மண்ணில் வீழ்ந்த விதை
முளைத்து பலன் ஈனும்
விண்ணில் விரைந்த திவலை
மாமழையாய் பொழிந்தே தீரும்
எதுவும் விரயம் இல்லை
இயற்கையின் நியதியிலே

பிறப்பென்ற நிகழ்வு
மரணத்தில் முற்றுபெரும்
நாம் செய்த நல்வினேயே
நமக்கென்று வாழ்ந்திருக்கும்
கொண்டு செல்ல ஏதுமில்லை
இயற்கையின் நியதியிலே

நியதிகளுக்கு உட்பட்டே
காலநதி ஓடிச் செல்லும்
துரிதமோ தாமதமோ
அதன் வழிதான் வெல்லும்
சிந்தை இதில் தெளிவு கண்டால்
பயணம் துயரின்றித் தொடரும்...

எழுதியவர் : வை.அமுதா (8-Jul-20, 9:26 am)
Tanglish : iyarkaiyin neyadhi
பார்வை : 72

மேலே