வஞ்சிப்பூ

ஆலிலை இடையழகி
அவள் முகம் கமலப்பூ
குறுகிய நுதலோ மூன்றாம்பிறை
அழகிய அவள் நாசி எட்பூ
அதில் மூக்குத்தி முத்துப்பூ
காதிரண்டில் வைரப்பூ
நீண்ட கழுத்து வெண்சங்கு
அதிலோர் ஆரணம் தங்கத்தாமரைப்பூ
கொஞ்சும் இளமையில் துள்ளும்
வஞ்சியின் கொங்கை இரண்டும்
கோபுர கலசங்கள் அதை அவள்
மூடிமறைகின்றாள் பட்டுசேலை உடுத்தி
மூடிய சேலைக்குள் காட்சி தரும்
எழிலே அந்த கமலப்பூ மொட்டுக்கள்
வாழைத்தண்டுகள் ஒக்கும் அவள் கால்கள்
அதில் ஆரணமாம் கொஞ்சும் சலங்கைகள்
அன்னம் இவள் ஆடிவர இன்னிசைத்தரும்
சலங்கையின் எழில் ஐயோ கேட்க ஆரமுதே

அழகி இவள் அழகுக்கே அழகு
அதனால் வஞ்சிப்பூ இவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jul-20, 12:22 pm)
பார்வை : 134

மேலே