சர்வம் சக்தி மயம்

கண்ணாடி முன்னால்
நின்றேன்....! !

என்ன ஆச்சரியம்....?
உன் உருவம்தான்
கண்ணாடியில்
முழுமையாக
தெரிந்தது....

இப்போது புரிகிறதா
அன்பே...! !

சிவ பெருமானே
தன் உடலில்
பாதியை தான்
சக்திக்கு கொடுத்தார்...! !

ஆனால்...?
நானோ என்னை
உனக்கு முழுமையாக
கொடுத்து விட்டேன்...! !

நீ ..பாதி... நான் பாதி
என்பதில் எனக்கு
உடன்பாடில்லை
சர்வம் சக்தி மயம்
என்பதே சரி...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Jul-20, 2:04 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 45

மேலே