காதல் கிறுக்கல்

விட்டு விட்டு மழைப் பெய்தது
கொட்டும் மழைத்தூறலைப் பார்க்க
வந்து நின்றாள் கன்னியவள் வெளியே
கைவிரித்து மழைத்தூறலைப் பிடித்து கைநிறைய
அள்ளி அள்ளி கன்னத்தில் வைத்துக்கொண்டாள்
மழைத்துளி எல்லாம் முத்துத்துளி என்று
நினைத்தாளோ தெரியவில்லை அப்படித்தான் என்று
நானே நினைக்கையிலே ஆமாம் என்பதுபோல்
தனது கைக்குட்டையை விரித்தாள் என்னைப்
பார்த்தே என்மனமும் குளிர நினைத்தேன்
இதுதான் மழைத்தந்த காதலின் ஆரம்பமென

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jul-20, 4:30 pm)
Tanglish : kaadhal kirukal
பார்வை : 296

மேலே