நகர்வது மலையா, மேக கடலா

எங்கெங்கும்
படர்ந்து கிடக்கும்
மேக கூட்டம்

மேக கடலில்
அடித்து செல்வது கருமை நிற
மலைகளா கப்பல்களா ?

இவைகள் நகர்ந்து
செல்கிறதா இல்லை மேக
கடல் அடித்து கொண்டு போகிறதா ?

பச்சை நிற
காடுகள் கூட
வெள்ளை போர்வை போர்த்தி படுத்து
கிடக்கிறது

எழுதியவர் : தாமோதரன். (10-Jul-20, 7:25 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 80

மேலே