சுவாசமடி நீ எனக்கு

ஜன்னலில் நகரும்
சாலையோர மரங்கள்
பயணங்களில் தூண்டும்
பழையதை நினைக்க.

எல்லாவற்றிலும்
உன் வாசம் தேடும்
நாசிக்குத் தெரியாது
நமக்கிடையேயான தூரம்

விடிந்ததிலிருந்து
இரவுவரை என
ஒவ்வொரு கணமும்
உன்னையே நினைப்பதால்
எப்பொழுதும்போல்
வேகமாகவே நகர்கிறது
என் நாட்கள்.

பிறந்ததிலிருந்து
நான் வளர்த்தாலும்
உன்னை கண்டநாள் முதலாய்,
உன் வளர்ப்பு பிராணியாகிப் போனது
எனது இதயம்

அதனால்தானோ
என்னவோ
நீ போகும் இடமெல்லாம்
உன் பின்னாலே
அலைகிறது அது...
வளர்த்தவரின் தவிர்ப்பிலும்
வருத்தப்படாத ஒரு
நாய்க்குட்டி போல.

நிலவில் காலடி வைத்தானாம்,
நிறையப் புகழும் நாளிதழ்கள்.!
ஒரு நிலவின் பின்னாலே
நிதமும் திரியும்..
என்னைப் பற்றி,
ஏன்..?!
எதுவும் எழுதவில்லை.?!

///-///-///
மருத கருப்பு.

எழுதியவர் : மருத கருப்பு (11-Jul-20, 12:48 pm)
பார்வை : 505

மேலே