புனித கங்கை

புனித கங்கை

அவள் வண்டியின்
சக்கரமும் – மணியும்
எப்போதும்
ஓர் பனிப்போரின் ஆயத்தத்தில்!
ஊர் விழித்தது யார் ஒலியில் என

அந்த கீழ் வானச் சிவப்பும்
அவள் வாய் ஒதுக்கிய
வெற்றிலையின் மிச்சமாய்!

காலந்தவறாத அவள் வருகையில்
கடிகாரங்கள்
சரி செய்து கொள்கின்றன்
தங்கள் ஓட்டத்தை!

மட்குவதும் மட்காததும்
அவள் கரம் பெற்றுத்
தழுவுகின்றன முக்தியை!

அழுக்கைக் கழுவி
தன்னை அழுக்காக்கிக் கொள்ளும்
கங்கையின் மகளா இவள்?

அவள் சிந்தும் வியர்வையில் குளித்து
இந்த பூமியே தன்னை
புனித மாக்கிக் கொள்வதாய்!

சு.உமாதேவி
சு. உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (12-Jul-20, 8:03 am)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : punitha kankai
பார்வை : 73

மேலே