சொக்கலிங்க சுகம்

மதுரைச் சொக்கலிங்கப் பெருமானைத் தரிசித்த கவிஞர் அந்த இன்பத்தை வியந்து பாடுகிறார்.

நேரிசை வெண்;பா

காண்டரிய மேனியுமொண் கந்தரமுஞ் சுந்தரனாய்
ஆண்டதுவு மேனிக் கமைந்ததுவும் - நீண்டமுகின்
மைக்கலிங்க மாகமணி மாடமணி மாமதுரைச்
சொக்கலிங்க மென்னுஞ் சுகம். 153

- கவி காளமேகம்

பொருளுரை:

“காணுதற்கும் அரியவான திருமேனியும், ஒளியுடைய செஞ்சடையும், சுந்தரனாக வந்து ஆட்கொண்டதும், மேனி யிடத்தேயே அமைந்ததுவும், எல்லாம் நீண்ட மேகங்களே கருத்து ஆடையாக மேலே விளங்கும் அழகிய மாடங்களையுடைய சிறந்த மதுரைச் சொக்கலிங்கம் என்னும் பேரின்பப் பொருளுக்கே உரியனவாகும்’

சுந்தரம் - மேகம். -

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-20, 10:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே