பழந்தமிழர் அளவைகள் -- தெரிந்துகொள்வோம் - 1

பழந்தமிழர் பயன்படுத்திய அளவைகளை தெரிந்துகொள்வோம் இந்தப் பகுதியில் ...

நிறுத்தல் அளவைகள் :

மூன்றே முக்கால் குன்றிமணி -- ஒரு பனவெடை

முப்பத்தி ரெண்டு குன்றிமணி -- ஒரு விராகன்

பதித்து விராகன் -- ஒரு பலம்

இரண்டு குன்றிமணி எடை --ஒரு உழுந்து எடை

ஒரு ரூபாய் எடை -- ஒரு தோலா

மூன்று தோலா -- ஒரு பலம்

எட்டு பலம் -- ஒரு சேர்

நாற்பது பலம் -- ஒரு வீசை

ஐம்பது பலம் -- ஒரு தூக்கு

ரெண்டு தூக்கு-- ஒரு துலாம்

ஒரு குன்றி எடை -- நூற்றி முப்பது மில்லிகிராம்

ஒரு பனவெடை -- நானுற்றி நாற்பத்தெட்டு மில்லி கிராம்

ஒரு தோலா --11 . 7 கிராம்

ஒரு பலம் -- முப்பது ஐந்து கிராம்

ஒரு வீசை -- 1400 கிராம்

ஒரு விராகன் -- நான்கு கிராம்

கால அளவுகள் :

ஒரு நாழிகை -- 24 நிமிடங்கள்

இரண்டரை நாழிகை -- ஒரு மணி நேரம்

மூன்றே முக்கால் நாழிகை -- ஒரு முகூர்த்தம்

அறுபது நாழிகை -- ஒரு நாள்

ஏழரை நாழிகை -- ஒரு சாமம்

ஒரு சாமம் -- மொன்று மணி நேரம்

எட்டு சாமம் -- ஒரு நாள்

நான்கு சாமம் -- ஒரு பொழுது

இரண்டு பொழுது -- ஒரு நாள்

பதினைந்து நாள் --ஒரு பக்கம்

இரண்டு பக்கம் -- ஒரு மாதம்

ஆறுமாதம் -- ஒரு அயனம்

இரண்டு அயனம் -- ஒரு ஆண்டு

அறுபது ஆண்டு -- ஒரு வட்டம்

முகத்தல் அளவைகள் :

முந்நூற்று அறுபது நெல் -- ஒரு சோடு

ஐந்து சோடு --ஒரு ஆழாக்கு

அரண்டு ஆழாக்கு -- ஒரு உழக்கு

இரண்டு உழக்கு --ஒரு உரி

இரண்டு உரி -- ஒரு நாழி

எட்டு நாழி -- ஒரு குறுணி

இரண்டு குறுணி -- ஒரு பதக்கு

இரண்டு பதக்கு -- ஒரு தூணி

மூன்று தூணி -- ஒரு கலம்

எஞ்சியவை அடுத்த பகுதியில் ...

எழுதியவர் : வசிகரன் .க (12-Jul-20, 12:41 pm)
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே