இயற்கை 💥

இயற்கை 💥

பூங்காற்று வீசுதம்மா
பூவானம் தூவியதம்மா
மனம் சிலர்குதம்மா
உடல் புல்லரிக்குதம்மா

அந்தி வானம் அழகாய் இருக்குதம்மா
ஆரஞ்சு புடவை கட்டி அழகாய் கடலில் இரங்குதம்மா
அலைகள் ஆர்பரித்து கரை தேடுதம்மா
வானம் வண்ணமயமானதம்மா
வர்ணஜாலம் புரியுதம்மா

இருட்டு ராஜாங்கம் தொடங்கியதம்மா
முரட்டு இருட்டை உடைத்தெறிய வானவீதியில்  பெளர்ணமி நிலவாள் வந்தாளம்மா
நீலகடலினிலே பட்டு தெறித்தாளம்மா

இயற்கை எழில் கண்டேனம்மா
காண கிடைக்காத காட்சியம்மா
இதை படைத்தவனுக்கு நன்றியம்மா
என்னை இவ்வாறு எழுத வைத்த தமிழுக்கு
மிக்க நன்றியம்மா.

- பாலு

எழுதியவர் : பாலு (12-Jul-20, 11:03 pm)
சேர்த்தது : balu
பார்வை : 238

மேலே